பெக்கான், செப்டம்பர்.12-
அரசாங்கம் வழங்கியுள்ள தலா 100 ரிங்கிட் சாரா ரொக்க உதவியில் மக்கள் ஈரச் சந்தையில் பொருட்களை வாங்குவதற்கான பரிந்துரையை உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, நிதி அமைச்சின் கவனத்திற்குக் கொண்டு செல்லவிருக்கிறது.
அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட வர்த்தகத் தளங்களில் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட 14 வகையான பொருட்களை மட்டுமே மக்கள் வாங்க முடியும் என்பது சாரா ரொக்க உதவித் திட்டத்தின் பிரதான நிபந்தனையாகும்.
எனினும் மக்கள் ஈரச் சந்தையிலும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக இந்த யோசனை நிதி அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுச் செல்லப்படவிருக்கிறது என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் வாணிபத்துறை துணை அமைச்சர் ஃபுஸியா சாலே தெரிவித்தார்.








