Oct 16, 2026
Thisaigal NewsYouTube

மலேசியா – தென்கொரியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவாகும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசியா – தென்கொரியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவாகும்

சோல், நவ.25-


மலேசியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையிலான தடையற்ற சுயேட்சை வர்த்தக ஒப்பந்தம், அடுத்த ஆண்டு தீர்க்கமாக முடிவாகும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

தென்கொரியா பிரதமர் யூன் சுக் இயோல், மலேசியாவிற்கு பதில் வருகையை மேற்கொள்ளும்போது, இந்த தடையற்ற சுயேட்சை ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

தென்கொரியாவிற்கு மூன்று நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு தலைநகர் சோலுக்கு சென்றுள்ள டத்தோஸ்ரீ அன்வார், மலேசியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையிலான தடையற்ற சுயேச்சை ஒப்பந்தம் குறித்து விவரிக்கையில் இதனை தெரிவித்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு மலேசியாவின் நிலைத்தன்மையற்ற அரசியல் சூழலால், கையெழுத்தாகவிருந்த இந்த சுயேட்சை வர்த்தக ஒப்பந்தம், ஒத்திவைக்கப்பட்டு கடந்த ஐந்து ஆண்டு காலமாக நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →