Aug 13, 2026
Thisaigal NewsYouTube
தபுங் ஹாஜி ஆர்சிஐ விசாரணை: முன்னாள் தலைமைச் செயலதிகாரி உட்பட மேலும் இருவர் கைது
தற்போதைய செய்திகள்

தபுங் ஹாஜி ஆர்சிஐ விசாரணை: முன்னாள் தலைமைச் செயலதிகாரி உட்பட மேலும் இருவர் கைது

Share:

தபுங் ஹாஜி தொடர்பான அரச விசாரணை ஆணையமான மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், சட்டப்பூர்வ அமைப்புடன் தொடர்புடைய, நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயலதிகாரி மற்றும் முன்னாள் தலைமை நிதி அதிகாரி ஆகியோரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் கைது செய்துள்ளது.

370 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இரண்டு தோட்ட நிறுவனங்களின் பங்கு கொள்முதல் விவகாரத்தில், தங்களது பதவியை தவறாக பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இருவரும், உடல்நலக் காரணமாக பின்னர் விடுவிக்கப்பட்டு, தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கானது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் பிரிவு 23-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதனுடன் தொடர்புடைய விசாரணையில், 3 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான இலவச வீட்டு சீரமைப்பு லஞ்சம் வழங்கியதாக ஒரு நிறுவன இயக்குநரும், 8 மில்லியன் ரிங்கிட் ஒப்பந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் தோட்ட மேலாளரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News