Sep 23, 2026
Thisaigal NewsYouTube
பளுதூக்குதல் விளையாட்டுக்கு 4.1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு; கூடுதல் 1 மில்லியன் கோரிக்கையும் பரிசீலனை
தற்போதைய செய்திகள்

பளுதூக்குதல் விளையாட்டுக்கு 4.1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு; கூடுதல் 1 மில்லியன் கோரிக்கையும் பரிசீலனை

Share:

2026-ஆம் ஆண்டில் பளுதூக்குதல் விளையாட்டின் மேம்பாட்டிற்காக 4.1 மில்லியன் ஒதுக்கியுள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், மலேசிய பளுதூக்கும் சங்கமான பீ.எ.பி.எம் கோரியுள்ள கூடுதல் 1 மில்லியன் ரிங்கிட் நிதியையும் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக அமைச்சர் டாக்டர் தௌஃபீக் ஜோஹாரி தெரிவித்துள்ளார்.

இந்த நிதியானது, வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மேம்பாடு, ரோட் டூ கோல்ட், மேடை, பெலாபிஸ் மற்றும் அடிமட்ட திறமைகளை உருவாக்கும் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயிற்சியாளர்களின் சம்பளம் உள்ளிட்ட தேவைகள் குறித்து பீ.எ.பி.எம் உடன் விரிவாக ஆலோசனை நடத்தப்படும் என்றும், மலேசியாவின் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வெல்லும் திறன் கொண்ட விளையாட்டுகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும் என்று நேற்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் மலேசியாவின் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக் குழுவை தாயகத்திற்கு வரவேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் டாக்டர் தௌஃபீக் ஜோஹாரி மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டார்.

Related News