Jun 15, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் வழிகாட்டி மறுஆய்வு: வதந்திகளுக்கு மாண்புமிகு வீ. பப்பாராய்டு விளக்கம்
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் வழிகாட்டி மறுஆய்வு: வதந்திகளுக்கு மாண்புமிகு வீ. பப்பாராய்டு விளக்கம்

Share:

சிலாங்கூர் மாநில அரசு, இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான “சமூக வசதிகள் திட்டமிடல் வழிகாட்டி மற்றும் தரநிலைகள் கையேடு” மறுஆய்வு குறித்து பரவி வரும் தவறான புரிதல்களுக்கு அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது.

இந்த வழிகாட்டுதல்களை மேம்படுத்தும் முடிவு மாநில நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டதுடன், சிலாங்கூரின் பன்முக சமூகங்களின் தேவைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும், திட்டமிடல் விதிமுறைகளை நடைமுறைக்கு ஏற்ப மாற்றுவதையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு தெரிவித்தார்.

மலேசியாவிலேயே இஸ்லாம் அல்லாத அங்கீகரிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களை மிக அதிகமாகக் கொண்ட மாநிலம் சிலாங்கூர் என்பதால், 2008 ஆம் ஆண்டு முதல் இதுவரை 481 வழிபாட்டுத் தலங்களுக்கு நிலப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போதைய ஆட்சிக்குழுவில் 57 நிலப்பட்டாக்கள் ஒப்புதல் பெற்றுள்ள வேளையில், இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்த எண்ணிக்கை 500-ஐத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இந்து ஆலயங்களே முன்னிலை வகிக்கின்றன என்று பாபாராய்டு வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய சாலைகளிலிருந்து நேரடி அணுகல் அனுமதிக்கப்படாது என்ற குற்றச்சாட்டு முற்றிலும் உண்மையல்ல. திருவிழாக் காலங்களில் ஏற்படும் மக்கள் கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுப் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்படுவதைத் தடுக்கவே பிரதான சேவைச் சாலைகள் அமைப்பது குறித்த விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

அதேபோல், கட்டுமானத் தலங்களில் உள்ள சன்னதிகள் தன்னிச்சையாக இடிக்கப்படும் என்பதும் தவறான கருத்தாகும். கட்டுமானக் காலத்தில் தற்காலிகமாக அமைக்கப்படும் சன்னதிகள், நிரந்தர ஆலயம் கட்டி முடிக்கப்பட்ட பின் அதற்கேற்ப மாற்றப்பட வேண்டும் என்பதே கொள்கை ஆகும். மேலும், ஜொகூர், பகாங் போன்ற மாநிலங்களில் 5 மீட்டர் உயரக் கட்டிடங்களே அனுமதிக்கப்படும் வேளையில், சிலாங்கூரில் 2010 முதல் 0.25 முதல் 0.5 ஏக்கர் நிலப்பரப்பில் அதிகபட்சமாக 72 அடி அல்லது சுமார் 6 மாடிகள் உயரம் வரை அனுமதிக்கப்படுகிறது என்று பாபாராய்டு விளக்கினார்.

மாநில அரசு இந்தத் தேவைகளைத் தேவையான இடங்களில் மறுஆய்வு செய்யத் திறந்த மனதுடன் தயாராக உள்ளது. எனவே, பொதுமக்கள் தவறான தகவல்களால் வழிநடத்தப்படாமல் அதிகாரப்பூர்வ அறிக்கைகளை மட்டுமே நம்புமாறு சிலாங்கூர் மத விவகாரங்களுக்கான சிறப்புக் குழுவான LIMAS-ஸின் இணைத் தலைவருமான பாபாராய்டு கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்