ஆண்டிறுதியில் ஏற்படும் வெள்ளப் பேரிடரை எதிர்கொள்ளும் வகையில் நாட்டின் ஐந்தாயிரத்து 63 பள்ளிகள் துயர் துடைப்பு மையங்களாக செயல்பட பதிவு செய்து கொண்டுள்ளன. அவற்றில் 8 பள்ளிகள் நிரந்தரத் துயர் துடைப்பு மையங்களாக செயல்பட இருப்பதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்தார்.
நட்மா உட்பட இவ்விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுடனும் கல்வி அமைச்சு ஒத்துழைக்க இருப்பதாகவும் சிறப்பு செயற்குழு ஒன்று தற்போது செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
பதிவு செய்து கொண்டுள்ள அனைத்துப் பள்ளிகளும் தர்போது அதர்கான ஆயுத்த வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்படும் பள்ளிகளுக்கு பிளாஸ்டிக்கால் ஆன நாற்காளிகள், மேசைகள் யாவும் வழங்கப்படவும் அமைச்சு தயாராக இருப்பதாகவும் அவர் சொன்னார்.
துயர் துடைப்பு மையங்களாக செயல்பட இருக்கும் அனைத்து பள்ளிகளிலும் கற்றல் கற்பித்தல் தங்கு தடையின்றி நடைபெறும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்,
பள்ளியில் ஒரு பகுதியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கினாலும் கற்றல் கற்பித்தல் பாதிக்காது என்றார்.
எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் தேதி தொடங்க இருக்கும் எஸ்பிஎம் தேர்வுக்காகவும் இந்தத் தயார்நிலை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஃபட்லினா சிடெக் குறிப்பிட்டார்.








