Jul 30, 2026
Thisaigal NewsYouTube
தியோமான் கடலடியில் இரண்டு LRT ரயில் பெட்டிகள்
தற்போதைய செய்திகள்

தியோமான் கடலடியில் இரண்டு LRT ரயில் பெட்டிகள்

Share:

புலாவ் டியோமன், ஜூலை 15-

இரண்டு LRT ரயில் பெட்டிகள் Tioman தீவின் கடலடியில் இறக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு ரயில் பெட்டிகளையும் LRT ரயில் சேவையை வழிநடத்தும் பிரதான நிறுவனமான Prasarana Malaysia Berhad அன்பளிப்பு செய்துள்ளது.

மலேசியத் தலைநகரில் கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட LRT ரயில் சேவையின் கேலனா ஜெய- வழித்தடத்திற்கு பயன்படுத்தப்பட்ட முதலாவது ரயில் வண்டியின் இரண்டு பெட்டிகள்தான் கடலடியில் இறக்கப்பட்டுள்ளதாக Prasarana நிறுவனம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு LRT ரயில் பெட்டிகளின் சேவை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் நிறுத்திக்கொள்ளப்பட்டன. 26 ஆண்டுகள் ஓடி உழைத்த நாட்டின் முதலாவது LRT ரயில் பெட்டிகளின் சேவையை நினைவுகூரும் வகையில் இவ்விரு பெட்டிகளும் தியோமான் தீவுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

Rapit Rail நிறுவனத்தின் தொழில்நுட்பக்குழுவின் வழிகாட்டலுடன் அந்த இரண்டு ரயில் பெட்டிகளும் கேலனா ஜெய-வில் இருந்து பகாங், கோலா ரோம்பின், Tioman- க்கு கொண்டு செல்லப்பட்டன.

அந்த இரண்டு ரயில் பெட்டிகளும் கடலடியில் இறக்கப்பட்டது மூலம் உயிரியல் பன்முகத்தன்மைக்கு ஆதரவு வழங்குவதோடு, கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்பை பாதுகாக்கும் முயற்சிக்கு பக்கபலமாக இருக்கும்.

குறிப்பாக, தியோமான் சுற்றுலாத்துறையின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்பதுடன் எதிர்காலத்தில் கடல் வாழ் உயிரினங்களுக்கு இவை சரணாலயமாக விளங்கும் என்று Prasarana தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர் பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

RM7 மில்லியன் பிணைத்தொகை கடத்தல் வழக்கு: மீட்கப்பட்ட நபர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையவர் என போலீஸ் தகவல்

RM7 மில்லியன் பிணைத்தொகை கடத்தல் வழக்கு: மீட்கப்பட்ட நபர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையவர் என போலீஸ் தகவல்

5,000 ரோஹிங்யா அகதிகளைத் திரும்பப் பெற மியான்மர் ஒப்புதல் : பிரதமர் தகவல்

5,000 ரோஹிங்யா அகதிகளைத் திரும்பப் பெற மியான்மர் ஒப்புதல் : பிரதமர் தகவல்