Oct 16, 2026
Thisaigal NewsYouTube

ரவாங்கில் ஆடவரின் அழுகிய சடலம் மீட்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ரவாங்கில் ஆடவரின் அழுகிய சடலம் மீட்பு

ரவாங், டிச.10-


ரவாங்கிலிருந்து வெளியேறும் ரவாங் பைபாஸ் மேம்பால சாலை அருகே உள்ளூரைச் சேர்ந்த 48 வயது ஆடவரின் அழுகிய சடலம் ஒன்று மீட்கப்பட்டதை போலீசார் இன்று உறுதிபடுத்தினர்.

இன்று காலை 9.30 மணியளவில் ரவாங்கில் மிக உயரமான ஜாலான் ரவாங் பைபாஸ் மேம்பால பாதையின் கீழ் தளத்தில் உள்ள காட்டில் அந்த உள்ளூர் ஆடவரின் சடலம் கிடப்பது குறித்து போலீசார் தகவல் பெற்றதாக கோம்பாக் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் சூப்ரிண்ட் அபாங் கடெரி அபாங் வாஸ்லிi தெரிவித்தார்.

நேர்த்தியான உடையில் காணப்பட்ட அந்த நபர், தலைக் கவசம் அ ணிந்த நிலையில் அந்தக் காட்டுப்பகுதியில் தலைக்குப்புற இறந்த கிடந்தார் என்று சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் தெரியவந்துள்ளது.

அந்த ஆடவருக்கு சொந்தமான உடமைகளான மணிபர்ஸ், அடையாளகார்டு, கைக்கடிகாரம் முதலியவற்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

சவப்பரிசோதனைக்காக அந்த ஆடவரின் உடல், கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த நபரின் இறப்பை திடீர் மரணம் என்று போலீசார் வகைப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தகவல் கொண்டு இருப்பவர்கள் போலீசாருடன் தொடர்பு கொள்ளுமாறு சூப்ரிண்ட் அபாங் கடெரி கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →