கோலாலம்பூர், நவம்பர்.22-
ஆபத்து அவசர வேளைக்கு அழைக்கப்படும் 999 என்ற எண்ணில் எந்த மாற்றமும் இல்லை என்றும், அது தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது என்றும் சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
999 எண் தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது என்பதற்கு அதனை வழிநடத்தி வரும் தரப்பினர் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றனர் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் சுகாதார அமைச்சு, ஆம்புலன்ஸ் சேவைகள் எப்போதும் செயல்படுவதை உறுதிச் செய்வதோடு, தேவைகள் மற்றும் நிலையான இயக்கத்திற்கு ஏற்ப மருத்துவ அழைப்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்கள் எந்த நேரத்திலும் 999 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.








