Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஆவேசமாக நடந்து கொண்ட நபர் கீழே விழுந்து மரணம்
தற்போதைய செய்திகள்

ஆவேசமாக நடந்து கொண்ட நபர் கீழே விழுந்து மரணம்

Share:

ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.12-

தனது தாயாரைக் கண்மூடித்தமான அடித்து, ஆவேசமாக நடந்த கொண்ட நபரை, குடும்ப உறுப்பினர்கள் சாந்தப்படுத்தும் முயற்சியின் போது அந்த நபர் கீழே விழுந்து மரணமுற்றார்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் பினாங்கு, குளுகோர், லோரோங் பெகாகா என்ற இடத்தில் நிகழ்ந்தது.

ஒரு மாற்றுத் திறனாளியான 48 வயதுடைய அந்த நபர் சம்பவ இடத்திலேயே மாண்டார். அந்த நபரின் வெறித்தனமானச் செயலை சகித்துக் கொள்ள முடியாமல் அவரைச் சாந்தப்படுத்தி, பிடிப்பதற்கு குடும்ப உறுப்பினர்கள் முயற்சி மேற்கொண்ட போது, அந்த நபர் கீழே விழுந்து கடும் காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்தார்.

பின்னர் குடும்ப உறுப்பினர்கள், போலீசாருடன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.

Related News