ஈப்போ, செப்டம்பர்.22-
கடந்த வாரம், தனது 2 மாத ஆண் கைக்குழந்தையை அணைத்தவாறு உறங்கிக் கொண்டு இருந்த போது, அந்த பச்சிளம் சிசு, மூச்சுத் திணறலுக்கு ஆளாகி மரணமுற்ற சம்பவத்தைத் தொடர்ந்து அக்குழந்தையின் தாயாருக்கு பேராக், பாரிட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.
தாயாரின் அலட்சிப் போக்கினால் அந்தக் குழந்தைக்கு மூச்சடைப்பு ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஓர் இந்தோனேசியாரான 36 வயது டெவின்தா தேஃபா என்ற அந்த மாது, தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
கடந்த செப்படம்பர் 19 ஆம் தேதி பாரிட், கோத்தா செத்தியா, கம்போங் சுங்கை டூவா என்ற முகவரியில் உள்ள அந்த மாதுவின் வீட்டில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.








