தாபோங் ஹாஜி விவகாரம் தொடர்பான அரச விசாரணை ஆணையமான ஆர்சிஐ அறிக்கையை அம்னோவும் பாஸ் கட்சியும் கேள்விக்குள்ளாக்குவது, அவை தங்கள் நிழலுக்கே பயப்படுவது போன்றதாகும் என்று பேராக் ஜசெக துணைத் தலைவர் டாக்டர் அப்துல் அசிஸ் பாரி சாடியுள்ளார்.
அந்த ஆர்சிஐ அறிக்கை, இரு கட்சிகளும் அரசாங்கத்தில் இருந்த காலத்திலேயே அமைக்கப்பட்டு, தனது விசாரணையை முடித்தது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
அறிக்கை வெளியான பிறகு புதிய ஆர்சிஐ வேண்டும் என்று கோருவதும் கருத்தரங்குகள் நடத்துவதும் விநோதமானது என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, தாபோங் ஹாஜி விவகாரத்தில் தொடர்புடையவர்களை “எலி வளை வரை தேடிப் பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பேரரசர் சுல்தான் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளதையும் அசிஸ் பாரி சுட்டிக்காட்டினார்.








