Oct 9, 2026
Thisaigal NewsYouTube

போக்குவரத்தைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவீர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போக்குவரத்தைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவீர்

சிப்பாங், ஜூன்.24-

மத்தியக் கிழக்கில் பல்வேறு வான் போக்குவரத்துப் பாதைகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து பயணிகள் குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு உள்ளூர் விமான நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

மத்தியக் கிழக்கில் எழுந்துள்ள நெருக்கடியைத் தொடர்ந்து பாதிக் ஏர் விமான நிறுவனம் உட்பட சில விமான நிறுவனங்கள் நேற்று முதல், தங்கள் விமானப் போக்குவரத்துச் சேவையை ரத்து செய்துள்ளதையும் அந்தோணி லோக் சுட்டிக் காட்டினார்.

மத்தியக் கிழக்கிற்கான விமான வழித் தடங்களுக்குரிய சேவைகள் பாதிக்கப்பட்டு இருப்பது தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →