Jul 6, 2026
Thisaigal NewsYouTube
நான்கு வயது சிறுவன் கொண்டோமினியம் வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்
தற்போதைய செய்திகள்

நான்கு வயது சிறுவன் கொண்டோமினியம் வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

Share:

கோலாலம்பூர், ஜூன்.06-

கொண்டோமினியம் வீடமைப்புப் பகுதியில் 30 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து 4 வயது சிறுவன் ஒருவன் மரணமுற்றான். இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை காலை 11 மணியளவில் கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் பகுதியில் உள்ள அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் நிகழ்ந்தது.

காலை 11.17 மணியளவில் கிடைக்கப் பெற்ற அவசர தகவலைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் அய்டில் போல்ஹாசான் தெரிவித்தார்.

சவப் பரிசோதனைக்காக சிறுவனின் சடலம், சான்ஸ்லர் துவாங்கு மூரிஸ் மருத்துவமனையின் சவக் கிடங்கிற்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. சிறுவனின் இறப்பு, திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே அந்த அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியின் கீழ் தளத்தில் விழுந்து கிடக்கும் சிறுவனின் உடலைக் கண்டு அவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கதறி அழும் காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று, சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்