Sep 30, 2026
Thisaigal NewsYouTube
'கேப்டன் பிரபா' கும்பலைச் சேர்ந்த மற்றொருவர் தாய்லாந்தில் கைது: மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்டார்
தற்போதைய செய்திகள்

'கேப்டன் பிரபா' கும்பலைச் சேர்ந்த மற்றொருவர் தாய்லாந்தில் கைது: மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்டார்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.01-

Op Jack Sparrow நடவடிக்கையின் கீழ், தாய்லாந்தில் பதுங்கியிருந்த 'கேப்டன் பிரபா' கும்பலைச் சேர்ந்த மற்றுமொரு நபர் தாய்லாந்து அதிகாரிகளின் உதவியுடன் கைது செய்யப்பட்டு நேற்று இரவு மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்டார். இந்த விவகாரத்தில் மலேசியா - தாய்லாந்து காவற்படைனரின் சிறப்பான ஒத்துழைப்பால் இதுவரை மொத்தம் 17 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தேசியக் காவற்படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.

சுமார் 30 உறுப்பினர்களைக் கொண்ட இக்கும்பலில் எஞ்சியுள்ள 15 பேரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிடிபட்ட நபரை விசாரணைக்காக நீதிமன்றக் காவலில் எடுக்க காவற்படையினர் இன்று விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் வெளிநாடுகளுக்குத் தப்பியோடிய இக்கும்பல் உறுப்பினர்களைப் பிடிப்பதற்குச் அனைத்துலக நிலையிலான ஒத்துழைப்பு மிக அவசியமானது என்றும், தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related News