கோலாலம்பூர், ஜூலை.31-
கோலாலம்பூர் மாநகரில் விபச்சாரத்தைத் துடைத்தொழிக்கும் ஓப் நோடா சோதனை நடவடிக்கை நேற்று புதன்கிழமை, ஜாலான் அம்பாங் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் மேற்கொள்ளப்பட்டத்தில் இந்திய நாட்டைச் சேர்ந்த 5 பெண்கள் உட்பட 12 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஹோட்டலின் அருகாமையில் சாலையோரத்தில் நின்று கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு வலை வீசும், இத்தகைய விபச்சார நடவடிக்கை குறித்து கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தின் D7 (டி செவன்) பிரிவான ஒழுங்கீன, சூதாட்டம் மற்றும் குண்டர் கும்பல் சிறப்புப் பிரிவு, ஜாலான் அம்பாங்கில் இந்த திடீர் சோதனையை மேற்கொண்டது.
இதில் 50 ரிங்கிட் கட்டணத்தில் அந்நிய நாட்டைச் சேர்ந்த ஆண்களுக்கு பாலியல் சேவை வழங்கி வந்ததாகச் சந்தேகிக்கப்படும் 22 க்கும் 43 க்கம் இடைப்பட்ட வயதுடைய 12 பெண்கள் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் இடைக்காலப் போலீஸ் தலைவர் டத்தோ முகமட் உசுஃப் ஜான் முகமட் தெரிவித்தார்.
இரவு 8.30 க்கு மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில் ரொக்கப் பணம் உட்பட பாலியல் சேவைக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








