Dec 4, 2025
Thisaigal NewsYouTube
தாதியர் பற்றாக்குறையைப் போக்க நிரந்தரப் பணி நியமனங்களுக்கு உத்தரவு: சுகாதார அமைச்சு அதிரடி!
தற்போதைய செய்திகள்

தாதியர் பற்றாக்குறையைப் போக்க நிரந்தரப் பணி நியமனங்களுக்கு உத்தரவு: சுகாதார அமைச்சு அதிரடி!

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.13-

மலேசியாவில் உள்ள பொது மருத்துவமனைகளில் நிலவும் தாதியர் பற்றாக்குறையைப் போக்க, இனி புதிய தாதியர் நியமனங்கள் அனைத்தும் நிரந்தரப் பணியிடங்களாகவே மேற்கொள்ளப்படும் எனச் சுகாதார அமைச்சு அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும், சுகாதார அமைச்சு பயிற்சி நிறுவனங்களான ஐஎல்கேகேஎம்மில் தாதியர் டிப்ளோமா பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை 1,500-லிருந்து 3,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசு பல்கலைக்கழகங்களிலும் தனியார் உயர்க்கல்வி நிறுவனங்களில் இருந்தும் இந்த ஆண்டு 1,000 தாதியர் பட்டதாரிகளை நியமிக்க இலக்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அனைத்து நடவடிக்கைகளும் தாதியர் பற்றாக்குறை சிக்கலைக் கையாள உதவும் என சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்தார்.

Related News