Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பெரிய வீடமைப்புத் திட்டங்களில் தொடக்கப்பள்ளி, இடைநிலைப்பள்ளி, பாலர் பள்ளி கட்டாயமாக்கப்படும்
தற்போதைய செய்திகள்

பெரிய வீடமைப்புத் திட்டங்களில் தொடக்கப்பள்ளி, இடைநிலைப்பள்ளி, பாலர் பள்ளி கட்டாயமாக்கப்படும்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.06-

நாட்டில் குறைந்தது 3,500 வீடுகள் கட்டப்படும் வீடமைப்புத் திட்டங்களில் கட்டாயமாகத் தொடக்கப்பள்ளி, இடைநிலைப்பள்ளி, பாலர் பள்ளி மற்றும் வருமானம் குறைந்தவர்களுக்காக இதர அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

ஒரு வீடமைப்புத் திட்டத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்படுவதற்கு முன்னதாக அந்த வீடமைப்புத் திட்டத்தில் ஒரு தொடக்கப்பள்ளி, இடைநிலைப்பள்ளி மற்றும் பாலர் பள்ளி கட்டப்படுவது அடிப்படை நிபந்தனையாகும்.

இந்த நிபந்தனையைப் பூர்த்தி செய்யக்கூடிய மேம்பாட்டாளர்களுக்கு மட்டுமே வீடமைப்புத் திட்டங்களுக்கு உரிய அனுமதியும், அங்கீகாரமும் வழங்கப்படும் என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.

13 ஆவது மலேசியத் திட்டத்தை வெற்றி அடைய செய்வதற்கு மடானி கோட்பாட்டின் ஒரு பகுதியாக இந்த நிபந்தனை அமைந்துள்ளது. இதனைக் கட்டாய நிபந்தனையாக வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சும், ஊராட்சி மன்றங்களும் உறுதிச் செய்ய வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

இன்று கோலாலம்பூர், செராஸ், பண்டார் தாசெக் பெர்மைசூரியில் அமான் மடானி வீடமைப்புத் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

Related News