May 5, 2026
Thisaigal NewsYouTube
எல்ஆர்டி3 தொடக்கத்தை விரைவுபடுத்த போக்குவரத்து அமைச்சகம் முயற்சி
தற்போதைய செய்திகள்

எல்ஆர்டி3 தொடக்கத்தை விரைவுபடுத்த போக்குவரத்து அமைச்சகம் முயற்சி

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.14-

கிள்ளான் பள்ளத்தாக்கில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான ஒரு தீர்வாக, ஷா ஆலாம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளை இணைக்கும் எல்ஆஇடி3 ரயில் சேவையைத் தொடங்குவதை விரைவுபடுத்த போக்குவரத்து அமைச்சு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறுகையில், பொதுமக்களுக்குப் பொதுப் போக்குவரத்துக்கான கூடுதல் தேர்வுகளை வழங்குவது மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டார்.

இருப்பினும், சாலையில் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நெரிசலைக் குறைக்கும் முயற்சி பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளதை அவர் ஒப்புக் கொண்டார். "அடுத்த சில மாதங்களில் எல்ஆர்டி3 பாதையை விரைவாகத் திறந்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர அமைச்சு அளவில் தொடர்ந்து முயற்சிப்போம். இது பயணிகளுக்கு ஒரு மாற்றாக அமையும்," என்று அவர் தெரிவித்தார்.

சீனப் புத்தாண்டை முன்னிட்டு கேஎல் சென்ட்ரலில் நடைபெற்ற கேடிஎம்பி ரயில் பயணிகளுக்கு சிறப்புப் பரிசு வழங்கும் நிகழ்விற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போது அந்தோணி லோக் இதனைத் தெரிவித்தார்.

கேடிஎம்பி தலைவர் அஹ்மாட் ரெட்ஸா அப்துல்லா முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இடிஎஸ் ரயில் பயணிகளுக்கு 250-க்கும் மேற்பட்ட பரிசுப் பைகள் வழங்கப்பட்டன.

Related News