ஷா ஆலாம், அக்டோபர்.15-
சிலாங்கூர் மாநில பள்ளிகளில் போலீஸ் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்படும் என்று மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ ஷாஸெலி கஹார் தெரிவித்தார். பள்ளி நேரங்களில் நடமாடும் போலீஸ் வாகனங்கள் நிறுத்தப்படுவதும் இதில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
பள்ளியுடன் தொடர்பு வைத்திருக்கும் போலீஸ் அதிகாரி மூலமாக பாதுகாப்புத் திட்டம் வலுப்படுத்தப்படும். இது பள்ளிகளில் பாதுகாப்பானச் சூழலை உறுதிச் செய்வதற்கான தொடர்ச்சியான முயற்சிகளில் ஒரு பகுதியாகும் என்று டத்தோ ஷாஸெலி கூறினார்.
இதன் தொடர்பில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கான பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பாதுகாப்பு முறை செயல்படுத்தப்படும் டத்தோ ஷாஸெலி தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமாவில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் இண்டாம் படிவ மாணவன், 16 வயது மாணவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்துப் பள்ளிகளிலும் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்று டத்தோ ஷாஸெலி குறிப்பிட்டார்.








