பெட்டாலிங் ஜெயா, ஜூலை 15-
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பினாங்கில் மேற்கொள்ளப்பட்ட சில சோதனை நடவடிக்கைகளில் நான்கு முதியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஜார்ஜ் டவுன், ஆயர் இதம் மற்றும் பன்டார் பாரு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 59 க்கும் 62 க்கும் இடைப்பட்ட வயதுடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பினாங்கு மாநில போலீஸ் தலைவர் ஹம்ஜாஹ் அஹ்மத் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்தது மூலம் ஒரு லட்சத்து 500 வெள்ளி மதிப்புள்ள methamphetamine மற்றும் heroin போதைப்பொருளை போலீசார் கைப்பற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.








