கங்கார், செப்டம்பர்.04-
மலேசியாவில் மிகச் சிறிய மாநிலமான பெர்லிஸ், சொந்த விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்குத் திட்டம் கொண்டுள்ளது. அந்த விமான நிலையம் பெர்லிஸ் மாநிலத்தில் தாய்லாந்து எல்லையில் கொண்டிருப்பதற்குத் திட்டம் கொண்டுள்ளதாக பெர்லிஸ் மந்திரி பெசார் முகமட் ஷுக்ரி ரம்லி தெரிவித்தார்.
பெர்லிஸ் மாநிலத்தின் மேம்பாட்டிற்காக ஒரு விமான நிலையம் கட்டப்படுவது மாநிலத்தின் மதிப்பை அதிகரிக்கச் செய்யும் என்று பெர்லிஸ் ராஜா, துவாங்கு சையிட் சிராஜுடின் ஜமாலுலாயில் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு இணங்க இந்த உத்தேசத் திட்டம் அமைவதாக அவர் குறிப்பிட்டார்.
விமானம் நிலையம் கட்டும் திட்டம் சாத்தியமாகுமானால் அதிகமான வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்கும் ஒரு மாநிலமாக பெர்லிஸ் விளங்கிடும் என்று அவர் குறிப்பிட்டார்.








