Jun 6, 2026
Thisaigal NewsYouTube
சுகாதாரப் பரிசோதனையில் பாதியினருக்குத் தொற்றா நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

சுகாதாரப் பரிசோதனையில் பாதியினருக்குத் தொற்றா நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

Share:

கோலாலம்பூர், மே.24-

சுகாதார அமைச்சின் PeKa B40 திட்டத்தின் கீழ் பரிசோதனை செய்தவர்களில் சுமார் பாதியினர், முதுமை அடைவதற்கு முன்பே நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் அல்லது இதய நோய் போன்ற ஏதேனும் ஒரு தொற்றா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ProtectHealth நிறுவனம் தெரிவித்துள்ளது. 2025-ஆம் ஆண்டின் தரவுகளின்படி, பரிசோதிக்கப்பட்டவர்களில் 46 விழுக்காட்டினருக்குப் புதிய நோய்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி வான் முஹமட் ஹஸ்வான் வான் முஹமட் நஜீப் தெரிவித்துள்ளார்.

இத்தகைய நோய்கள் இளம் வயதினரையும் பாதிப்பது நாட்டின் தொழிலாளர் உற்பத்தித் திறன், பொருளாதார நிலைத்தன்மை ஆகியவற்றை அச்சுறுத்துவதாக அவர் எச்சரித்துள்ளார். தகுதியுள்ள 7.1 மில்லியன் மக்களில் சுமார் 27 விழுக்காட்டினர் மட்டுமே இலவசப் பரிசோதனை வசதியைப் பயன்படுத்திக் கொள்வது கவலையளிப்பதாகவும், பொதுமக்கள் ஆரோக்கியத்தின் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்