முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரஸாக்கிற்கு வழங்கப்பட்ட வீட்டுக்காவல் தொடர்பான நிபந்தனை மன்னிப்பை எதிர்த்து மலேசிய வழக்கறிஞர் மன்றம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது.
மன்னிப்பு வாரியத்தின் இந்த முடிவும் அதற்கான பரிந்துரையும் எதிர்த்து, தனது வழக்கறிஞர்கள் மூலம் சவால் செய்யவுள்ளதாக அதன் தலைவர் ஆனந்த் ராஜ் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, 2024 ஆம் ஆண்டு நஜிப்பின் சிறைத்தண்டனையையும் அபராதத்தையும் குறைத்த மன்னிப்பு வாரியத்தின் முடிவை எதிர்த்து ஏற்கெனவே தொடர்ந்துள்ள மேல்முறையீட்டையும் மன்றம் தொடர்ந்து முன்னெடுக்கும்.
அந்த மேல்முறையீட்டின் தீர்ப்பை வரும் ஜனவரி 7ஆம் தேதி வழங்க மேல்முறையீட்டு நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.








