நெகிரி செம்பிலான் மாநிலம், கோலா பிலாவிலுள்ள பள்ளி ஒன்றின் விடுதியில், பகடிவதைக்கு உள்ளானதாக நம்பப்படும் இரண்டாம் படிவ மாணவர் ஒருவர் நேற்று இரவு உயிரிழந்தார்.
14 வயதான அந்த மாணவர் பள்ளி விடுதியில் சுயநினைவின்றி கிடந்ததாகவும், உடனடியாக துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் உயிரிழந்ததை அங்குள்ள மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், மாணவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக சிரம்பானில் உள்ள துவாங்கு ஜாஃபார் மருத்துவமனையின் தடயவியல் மருத்துவப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கோலா பிலா மாவட்ட போலீஸ் தலைவர் முஹமட் முஸ்தஃபா ஹுசேன் தெரிவித்துள்ளார்.








