கிளானா ஜெயா எல்ஆர்டி பாதையில் பயணித்த 45 வயது பெண் ஒருவரை ஆடவர் ஒருவர் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து வங்சா மாஜு மாவட்ட போலீஸ் தலைவர் அன்னாஸ் சுலைமான் கூறுகையில், இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 6.30 மணியளவில், டத்தோ கெராமாட் மற்றும் ஜெலாதெக் நிலையங்களுக்கு இடையே அப்பெண் ரயிலில் பயணித்த போது நடந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, காயம் ஏற்படுத்தும் நோக்கில் தாக்கியதாக, அந்த ஆடவருக்கு எதிராக குற்றவியல் சட்டம் பிரிவு 323-ன் கீழ் விசாரணை ஆவணம் திறக்கப்பட்டுள்ளது.
ரயில் பெட்டியில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், அடையாளம் தெரியாத அந்த நபர் தனது முகம் மற்றும் தலையில் குத்தியதாக அப்பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.








