May 24, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரின் பூவியியல் அமைப்பு முறையே காரணமாகும்
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரின் பூவியியல் அமைப்பு முறையே காரணமாகும்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 25-

கோலாலம்பூர் மஸ்ஜிட் இந்தியாவில் மண் புதையுண்ட சம்பவமானது, மாநகரின் பூவியில் அமைப்பு முறையே காரணமாகும் என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ ஃபதிலா யூசுப் தெரிவித்தார்.

கோலாலம்பூரில் குறிப்பாக மஸ்ஜிட் இந்தியா பகுதி, சுண்ணாம்பு கற்களை உள்ளடக்கிய நிலப்பகுதியாகும். இத்தகைய சுண்ணாம்பு கற்களை உள்ளடக்கியப் பகுதி, மண் நகர்ச்சியை உண்டு பண்ணும் என்பதுடன் எளிதில் நிலச்சரிவுக்கு வித்திடும் என்று முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சரும் ஃபதிலா யூசுப் குறிப்பிட்டார்.

இது போன்ற நிலப்பகுதியில் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் நிலச்சரிவுக்கு அல்லது மஸ்ஜிட் இந்தியாவில் நிகழ்ந்ததைத் போன்று திடீர் குழிகள் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில் இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க அப்பகுதியில் விரிவான ஆய்வு நடத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று ஃபதிலா யூசுப் தெரிவித்தார்.

Related News