ஷா ஆலாம், அக்டோபர்.10-
தனது காதலியின் மூன்று வயது மகனுக்கு மரணத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக இ-ஹெய்லிங் ஓட்டுநர் ஒருவருக்கு ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் இன்று 17 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
31 வயது B. ஜீதேந்த்ராஜ் என்ற அந்த இ -ஹெய்லிங் ஓட்டுநர், தனக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டு, நோக்கமில்லாக் கொலையாக திருத்தப்பட்டதைத் தொடர்ந்து குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் பிடிபட்ட நாளான 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் தண்டனை அமலுக்கு வருவதாக நீதிபதி ஜூலியன் இப்ராஹிம் தெரிவித்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி இரவு 11.45 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, கம்போங் சுங்கை காயு ஆரா, ஜாலான் கெனாங்காவில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்ட் வீட்டில் 3 வயது யு. வருனேஷ் என்ற சிறுவனுக்கு மரணம் விளைவித்ததாக ஜீதேந்த்ராஜ் குற்றஞ்சாட்டப்பட்டார்.








