கோலாலம்பூர், டிசம்பர்.30-
சரவாக்கின் பல பகுதிகளில் நாளை டிசம்பர் 31-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரையில், இரண்டு நாட்களுக்குத் தொடர் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா அறிவித்துள்ளது.
குறிப்பாக, கூச்சிங், செரியான், சமரஹான் ஶ்ரீ அமான் மற்றும் பெத்தோங் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் மெட்மலேசியா இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் அனைவரும் தொடர் மழையைக் கருத்தில் கொண்டு, தங்களது பயணத் திட்டங்களை அமைத்துக் கொள்ளுமாறும், வானிலை குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வ பக்கங்களில் இருந்து அறிந்து கொள்ளுமாறும் மெட்மலேசியா வலியுறுத்தியுள்ளது.








