Oct 9, 2026
Thisaigal NewsYouTube

மலேசியர்களுக்கு முதல் வாய்ப்பை வழங்க வேண்டும்!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசியர்களுக்கு முதல் வாய்ப்பை வழங்க வேண்டும்!

கோலாலம்பூர், ஜூன்.22-

வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதற்கு முன், தோட்டத் துறை நிறுவனங்கள், தொழிற்கல்வி பயிற்சி மாணவர்களைப் பணியமர்த்துவதற்கான முன் நிபந்தனையைத் தோட்டத் தொழில் - மூலப் பொருட்கள் அமைச்சு விதித்துள்ளது. TVET மாணவர்களைப் பணியமர்த்தியதற்கான ஆதாரத்தை அமைச்சிடம் சமர்ப்பித்த பின்னரே வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதற்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் ஜொஹாரி அப்துல் கானி தெரிவித்தார்.

உள்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சிக்குப் பங்களிக்காத எந்த நிறுவனத்திற்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்த அனுமதி இல்லை என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →