Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா சிறு வியாபாரிகள் தீபாவளி போர்க்கோடி
தற்போதைய செய்திகள்

பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா சிறு வியாபாரிகள் தீபாவளி போர்க்கோடி

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.13-

கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு காலம் காலமாக வியாபாரம் செய்து வரும் வியாபபாரிகளில் பெரும்பாலோர் இம்முறை புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, இன்று போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

வரும் அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் சிறுதொழில் வியாபாரிகள் வியாபாரம் செய்ய கோலாலம்பூர் மாநகர் மன்றம் லைசென்ஸ் வழங்குவது வழக்கமாகும்.

ஆனால் இந்த ஆண்டு காலம் காலமாக வியாபாரம் செய்து வரும் தாங்கள் 40 பேரில், 11 பேருக்கு மட்டுமே தீபாவளி வியாபார வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி, சிறு வியாபாரிகள் இன்று சனிக்கிழமை தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

பெரும்பாலான வியாபாரிகள் மீண்டும் வியாபாரம் செய்ய லைசென்ஸ் வழங்கப்படவில்லை என்று கூறி அவர்கள் தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர்.

Related News