Oct 13, 2026
Thisaigal NewsYouTube

அஸாம் பாக்கி பதவிக் காலம் நீட்டிக்கப்படுவதற்கு சபா மக்கள் எதிர்ப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அஸாம் பாக்கி பதவிக் காலம் நீட்டிக்கப்படுவதற்கு சபா மக்கள் எதிர்ப்பு

கோலாலம்பூர், ஏப்ரல்.05-

அடுத்த மாதம் பிற்பகுதியில் தமது பதவிக் காலத்திற்கான ஒப்பந்தத்தை நிறைவு செய்யவிருக்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுவதற்கு சபா மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அரசு சாரா இயக்கம் ஒன்று கூறுகிறது.

அஸாம் பாக்கியின் பதவி காலம், மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்படலாம் என்று வெளிவந்துள்ள தகவலுக்கு சபா மக்கள் தங்கள் எதிர்ப்பையும், அதிர்ச்சியையும் தெரிவித்துள்ளதாக Sabah Entitilement And Equaty என்ற அமைப்பின் தலைவர் Duncan Cheng தெரிவித்துள்ளார்.

அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமானால் அது சபா மக்களை ஆத்திரத்தில் ஆழ்த்தும் என்று இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் Duncan Cheng குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →