Oct 18, 2026
Thisaigal NewsYouTube

முக்கிய தலைவர் வீட்டில் சோதனை- புத்தகங்கள் மீட்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
முக்கிய தலைவர் வீட்டில் சோதனை- புத்தகங்கள் மீட்பு

கோத்தா பாரு,செப்டம்பர் 21-

கிளந்தான், கோத்தாபாருவில் கம்புன் பஞ்சி-யில் இருக்கும் Global Ikhwan Holdings நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரியின் குடும்ப இல்லம் எனக் கருதப்படும் மூன்று வீடுகளில் கிளந்தான் போலீசார் இன்று அதிரடிச் சோதனை நடத்தினர்.

அதிகாலை 6.30 மணி தொடங்கி காலை 9.00 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையில் கிளந்தான் மாநில போலீஸ் தலைமையகத்தின் போலீஸ் குழுவுடன் கிளந்தான் இஸ்லாமிய சமய விவகார இலாகாவின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

அந்த மூன்று குடியிருப்புகளிலும் முக்கியப் புள்ளியின் இரண்டாவது மனைவி, 20க்கும் மேற்பட்ட சிறார்கள் உட்பட சுமார் 30 குடியிருப்பாளர்கள் வசிப்பதை இந்த நடவடிக்கையில் பங்கேற்ற நிருபர் ஒருவர் கண்டறிந்தார்.

ஆற்றங்கரையில் புதைக்கப்பட்டிருந்த Global Ikhwan தொடர்பான பல்வேறு புத்தகங்கள் மற்றும் ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றினர். மேலும் சில புத்தகங்கள் எரிக்கப்பட்டுள்ளதையும் அவர்கள் கண்டனர்.
இதற்கிடையில், கிளந்தான் உட்பட பல மாநிலங்களில் இன்று பெரிய அளவில் சோதனை நடவடிக்கை நடைபெற்றதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →