Oct 18, 2026
Thisaigal NewsYouTube

மழையையும் பொருட்படுத்தாமல் 63,000 ரசிகர்களை ஈர்த்த சித்தி நூர்ஹாலிஸா இசை நிகழ்ச்சி: அன்வார் பாராட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மழையையும் பொருட்படுத்தாமல் 63,000 ரசிகர்களை ஈர்த்த சித்தி நூர்ஹாலிஸா இசை நிகழ்ச்சி: அன்வார் பாராட்டு

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், சுமார் 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில், உணர்வுப்பூர்வமாகப் பாடிய புகழ்பெற்ற பாடகி டத்தோ ஶ்ரீ சித்தி நூர்ஹாலிஸா தாருடினுக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற பாரம்பரிய கெமா பூமாந்தாரா இசை நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றதாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த இசை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திய தயாரிப்புக் குழுவினருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மழை பெய்த போதிலும், நிகழ்ச்சியைக் காண வந்த ரசிகர்கள் இறுதிவரை அரங்கில் இருந்ததாகவும், நூசாந்தாரா வட்டாரத்தின் செழுமையான கலை மரபுகளை இந்த நிகழ்ச்சி அழகாகக் கொண்டாடியதாகவும் அன்வார் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், கலை மற்றும் கலாசாரம் மக்களின் இதயங்களில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்த அன்வார், நாட்டின் பாரம்பரியத்தை இளைய தலைமுறையினரும் தொடர்ந்து பாதுகாத்துப் போற்ற வேண்டும் என்றார்.

மேலும், நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் அதேவேளையில், கலாசார வேர்களையும் தேசிய அடையாளத்தையும் பாதுகாக்கத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →