Oct 18, 2026
Thisaigal NewsYouTube

போராட்ட சூழல்: பிரான்ஸ் பயணத்தை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போராட்ட சூழல்: பிரான்ஸ் பயணத்தை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்

பிரான்ஸின் முக்கிய நகரங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களைத் தொடர்ந்து, அத்தியாவசியமற்ற பயணங்களை ஒத்திவைப்பது குறித்து பரிசீலிக்குமாறு மலேசியர்களுக்கு அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் நிலவி வரும் பதற்ற நிலையை வெளியுறவு அமைச்சு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இதுவரை மலேசியர்கள் யாரும் போராட்டங்களில் ஈடுபட்டதாகவோ அல்லது அவற்றால் பாதிக்கப்பட்டதாகவோ தகவல் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

இது குறித்து இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், பிரான்ஸில் உள்ள மலேசியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், விழிப்புடன் செயல்படவும் பாரிஸில் உள்ள மலேசியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளையில் பிரான்ஸ் நாட்டிற்கான பயணக் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்றாலும், அங்கு நிலைமை சீராகும் வரை அத்தியாவசியமற்ற பயணங்களை ஒத்திவைப்பது குறித்து பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →