Oct 18, 2026
Thisaigal NewsYouTube

தெலுக் நீப்பா கடற்கரையில் 12 அடி நீள ராட்சஷ முதலை பிடிபட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தெலுக் நீப்பா கடற்கரையில் 12 அடி நீள ராட்சஷ முதலை பிடிபட்டது

சரவாக் மாநிலம், கூச்சிங் அருகே உள்ள தெலுக் நீப்பா கடற்கரையில் கடந்த வியாழக்கிழமை 12 அடி நீளமுள்ள முதலை ஒன்று பிடிக்கப்பட்டது.

கடற்கரையில் ராட்சஷ முதலை ஒன்று தென்பட்டதாக 55 வயது ஆண் ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சரவாக் மாநில உள்நாட்டுப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

அதேவேளையில், அதிருஷ்டவசமாக அப்பகுதியைச் சேர்ந்த எவரும் இந்த முதலைத் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பொதுமக்களின் ஒத்துழைப்பு, சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்டுள்ள முதலை பிடிக்கும் நிபுணரான ஜெஃப்ரி சியூ, கடற்கரைகள், ஆறுகள் மற்றும் முதலைகள் இருக்கக்கூடிய பிற பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →