குவாந்தான், நவம்பர்.08-
பகாங், ஜாலான் கம்பாங், 10 ஆவது மைலில் மூன்று டெங்கர் லோரிகள் தீப்பிடித்துக் கொண்டன. தீயணைப்பு, மீட்புப்படையினரின் துரித நடவடிக்கையினால் அந்த மூன்று டெங்கர் லோரிகளும் முற்றாக அழிவதிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளன.
மூன்று லோரிகளில் பரவிய தீயை தீயணைப்பு, மீட்புப்படையினர் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தினர்.
இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2.50 மணியளவில் நிகழ்ந்தது.
இரண்டு லோரிகளில் தலா 40 ஆயிரம் லிட்டர் கொள்ளளவும், மற்றொரு லோரியில் 20 ஆயிரம் கொள்ளளவும் இருந்ததாக தாமான் தாஸ் தீயணைப்பு, மீட்பு நிலையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.








