சிரம்பான், அக்டோபர்.04-
செனாவாங்கில் உள்ள ஒரு பள்ளியின் கழிப்பறையில், மயக்க நிலையில் கண்டறியப்பட்ட 10 வயது மாணவர், கழுத்தில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக உயிரிழந்திருப்பதாகப் பிரேதப் பரிசோதனையில் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
அதே வேளையில், அம்மாணவரின் உடலில் வேறு எந்த காயங்களும் இல்லை என்று நெகிரி செம்பிலான் மாநில காவல்துறைத் தலைவர் அல்ஸஃப்னி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 27 பேரிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
மாணவரின் மரணத்திற்கானக் காரணத்தை அறிய போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.








