Oct 9, 2026
Thisaigal NewsYouTube

மலேசிய ஆயுதப்படையின் லெஃப்டனன் ஜெனரலாக டத்தோ ஜோனி லிம் எங் செங் நியமனம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசிய ஆயுதப்படையின் லெஃப்டனன் ஜெனரலாக டத்தோ ஜோனி லிம் எங் செங் நியமனம்

கோலாலம்பூர், ஜூன்.24-

மலேசிய ஆயுதப்படையின் லெஃப்டனன் ஜெனரலாக டத்தோ ஜோனி லிம் எங் செங் நியமிக்கப்பட்டுள்ளார். மலேசிய வரலாற்றில் ஆயுதப்படையில் சீன சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், உயரிய பொறுப்பை வகிப்பது இதுவே முதல் முறையாகும்.

இன்று கோலாலம்பூர், விஸ்மா பெர்தாஹானில் நடைபெற்ற பதவியேற்பு சடங்கில் ஆயுதப்படை தளபதி ஜெனரல் டான் ஶ்ரீ முகமட் நிஸாம் ஜாஃப்பார் முன்னிலையில் டத்தொ ஜோனி லிம் எங் செங்கிற்குப் பதவி உயர்விற்கான அந்தஸ்து வழங்கப்பட்டது.

மலாக்கா, சென். பிரான்சிஸ் தொடக்கப்பள்ளியில் 1973 முதல் 1978 ஆம் ஆண்டு வரை கல்வி கற்ற டத்தோ ஜோனி லிம், மலாக்கா, சென். பிரான்சிஸ் இடைநிலைப்பள்ளியில் 1979 முதல் 1983 வரை கல்வியை முடித்துக் கொண்டு ஆயுதப்படையில் பயிற்சி அதிகாரியாகப் பங்கேற்று, பின்னர் பிரிட்டனில் சென்ஹெர்ஸ்ட் அரச இராணுவக் கல்லூரியில் இராணுப் பயிற்சியை மேற்கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →