Oct 2, 2026
Thisaigal NewsYouTube

அவ்விருவரின் கடப்பிதழ்களும் செல்லத்தக்கவையே- உள்துறை அமைச்சர் விளக்கம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அவ்விருவரின் கடப்பிதழ்களும் செல்லத்தக்கவையே- உள்துறை அமைச்சர் விளக்கம்

கோலாலம்பூர், நவம்பர்.29-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் காணொளி உள்ளடக்கங்களை உருவாக்குபவர்களான இருவர், பயன்படுத்தியுள்ள கடப்பிதழ்கள், போலியானவை என்று கூறி, வீடியோ ஒன்று வெளியிடப்பட்ட போதிலும் அந்த இருவர் பயன்படுத்திய கடப்பிதழ் செல்லத்தக்கவையே என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் விளக்கம் அளித்துள்ளார்.

போஸ்னியா மற்றும் ஸீ நாட்டு பிரஜைகளான அவ்விருவரின் கடப்பிதழ்களின் நம்பகத்தன்மை ஆராயப்பட்ட போது அவை உண்மையான ஆவணம் என்பது தெரியவந்துள்ளதாக சைஃபுடின் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் போலி கடப்பிதழை கொண்டு நான் சாதிப்பேன் என்ற தலைப்பில் அந்த போஸ்னியா பிரஜையும், சீன நாட்டுப் பிரஜையும் வெளியிட்ட காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.

மேலும் அவ்விருவரின் கடப்பிதழ்களைச் சோதனை செய்தவர், உதவிப் போலீஸ்காரர் அல்ல, குடிநுழைவு அதிகாரி என்பதையும் சைஃபுடின் விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
துன் மகாதீருக்கு துக்கத்தில் இருந்து மீள சற்று அவகாசம் தேவை – முக்ரிஸ்

துன் மகாதீருக்கு துக்கத்தில் இருந்து மீள சற்று அவகாசம் தேவை – முக்ரிஸ்

55 மலேசியர்கள் மாயமான நேபாள வெள்ளம்: ஒருவர் 37 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக நாடு திரும்பினார்

55 மலேசியர்கள் மாயமான நேபாள வெள்ளம்: ஒருவர் 37 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக நாடு திரும்பினார்

பாலஸ்தீனியர் கடத்தல் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவருக்கு கைது ஆணை

பாலஸ்தீனியர் கடத்தல் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவருக்கு கைது ஆணை

கோலாலம்பூரில் களைகட்டியது F1 பந்தயம்: 365 போலீசார் களத்தில் குவிப்பு, 9,000 வாகனங்களுக்கு நிறுத்தும் வசதி

கோலாலம்பூரில் களைகட்டியது F1 பந்தயம்: 365 போலீசார் களத்தில் குவிப்பு, 9,000 வாகனங்களுக்கு நிறுத்தும் வசதி

2-வது இடத்தில் மலேசியக் கடப்பிதழ்: உலக நாடுகளின் நம்பகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக உள்துறை அமைச்சு தகவல்

2-வது இடத்தில் மலேசியக் கடப்பிதழ்: உலக நாடுகளின் நம்பகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக உள்துறை அமைச்சு தகவல்

தம்புன் அருகே பரிதாபம்: சாலை விபத்தில் 2 பள்ளி மாணவிகள் பலி; ஒருவர் படுகாயம்

தம்புன் அருகே பரிதாபம்: சாலை விபத்தில் 2 பள்ளி மாணவிகள் பலி; ஒருவர் படுகாயம்