Sep 6, 2026
Thisaigal NewsYouTube
“விவசாயிகளை பலிகடா ஆக்கக்கூடாது!” – உர விநியோக தாமதம் குறித்து எஸ்பிஆர்எம் விசாரணைக்கு அன்வார் உத்தரவு
தற்போதைய செய்திகள்

“விவசாயிகளை பலிகடா ஆக்கக்கூடாது!” – உர விநியோக தாமதம் குறித்து எஸ்பிஆர்எம் விசாரணைக்கு அன்வார் உத்தரவு

Share:

கோலாலம்பூரில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற MAHA 2026 எனப்படும் மலேசிய வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் சுற்றுலா கண்காட்சியின் நிறைவு விழாவில் உரையாற்றிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நெல் விவசாயிகளுக்கு உரம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்தி, விநியோக நடைமுறைகளை மறுஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

உரம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்துக்கான உண்மையான காரணம் கண்டறியப்பட வேண்டும் என்றும், விநியோகப் பொறுப்பை ஏற்றுள்ள நிறுவனங்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கடமைகளை முறையாக நிறைவேற்றினார்களா? என்பது ஆராயப்பட வேண்டும் என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக நெல் விவசாயிகளிடமிருந்து புகார்களும் ஆட்சேபனைகளும் தமக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒப்பந்த நிறுவனங்கள் தொடர்ந்து தவறுகளைச் செய்தால், அவற்றின் ஒப்பந்தங்களை ரத்து செய்து புதிய நிறுவனங்களை நியமிக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

தேவை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை அல்லது குற்றச்சாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இந்த செயல்முறையை ஊழல் தடுப்பு ஆணையம் கண்காணிக்க வேண்டும் என்றும் அன்வார் உத்தரவிட்டுள்ளார்.

Related News