தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனங்கள், வாகனப் புகை மற்றும் நீர், மண் மாசுபாடு ஆகியவை சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மட்டுமல்ல; நீண்டகால பாதிப்புகள் குழந்தைகள் உட்பட பலருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயத்துடன் தொடர்புடையவை என பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா எச்சரித்துள்ளார்.
புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் புகைப்பிடித்தல், உணவுமுறை ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்தக் கூடாது என்றும், தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளியேறும் மாசுபாடுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தொழில் வளர்ச்சியை விட பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்தங்கியுள்ள “புற்றுநோய் பாதிப்புப் பகுதிகள்” உருவாகுவதை மலேசியா தவிர்க்க வேண்டும் என்றும் சுல்தான் நஸ்ரின் வலியுறுத்தினார்.
லண்டனில் மாசைக் கட்டுப்படுத்தியதன் மூலம் குழந்தைகளின் நுரையீரல் செயல்பாடு மேம்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், தூய்மையான காற்று குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் என்றார்.
Air we breathe could be harming children, says Sultan Nazrin








