உரிமமற்ற பணக் கடன் வழங்கும் வட்டி முதலைகளான ‘அலோங்’ கும்பல் நடவடிக்கைகளில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு உள்ளூர் ஆடவர்களை போலீசார் தெலுக் இந்தான் பகுதியில் கைது செய்துள்ளனர்.
Ops Vulture நடவடிக்கையின் கீழ், வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க முயன்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மற்றவர்களுக்குச் சொந்தமானதாக நம்பப்படும் இரண்டு ஏடிஎம் அட்டைகளும், 300 ரிங்கிட் ரொக்கமும் கண்டுபிடிக்கப்பட்டது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, தெலுக் இந்தான் ஜாலான் ஆ சியோங்கில் (Jalan Ah Cheong) உள்ள ஒரு பணக் கடன் நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டு மற்றொருவரும் கைது செய்யப்பட்டார்.
சோதனையில் 5 ஏடிஎம் அட்டைகள், ரொக்கப் பணம் மற்றும் தங்கம் என சந்தேகிக்கப்படும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 2,050 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இருவரும் மீது குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 420 மற்றும் 424-இன் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.








