சரவாக் மாநிலத்தில் புகைமூட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆறு பகுதிகளில் காற்று மாசுக் குறியீடு மிகவும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி, செரியான் பகுதியில் அதிகபட்சமாக 287 என்ற காற்று மாசுக் குறியீடு பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து கூச்சிங் 267, ஸ்ரீ அமான் 251, சமராஹான் 242, சமலாஜு 202 மற்றும் பிந்துலு 201 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியான வறண்ட வானிலை மற்றும் அண்டை நாடுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ புகை காரணமாக நிலைமை மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
காலிமந்தான் பகுதியில் இருந்து புகைமூட்டம் வடகிழக்கு நோக்கி நகர்ந்து, சரவாக், சபா மற்றும் புரூணை பகுதிகளை பாதித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








