Sep 5, 2026
Thisaigal NewsYouTube
10 நாட்களுக்குப் பிறகு சேற்றுக்குள் உயிருடன் மீட்கப்பட்ட 64 வயது நேபாளப் பெண்
தற்போதைய செய்திகள்

10 நாட்களுக்குப் பிறகு சேற்றுக்குள் உயிருடன் மீட்கப்பட்ட 64 வயது நேபாளப் பெண்

Share:

நேபாளத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பேரழிவான வெள்ளத்தில், சேறும் இடிபாடுகளும் மூடியிருந்த தனது வீட்டுக்குள் சிக்கிய 64 வயது பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

நுவாகோட் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரிகா ஷ்ரேஸ்தா, தனது வீடு தடிமனான சேற்றுக்குள் புதைந்திருந்த நிலையிலும் உயிர் பிழைத்தது மீட்புப் பணியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பகுதியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரைக் கண்டுபிடித்து மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக அவர் விமானம் மூலம் காத்மண்டுவுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதற்கிடையில், நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் உள்ள நீர்மின் திட்ட சுரங்கம் ஒன்றிலும் சீனாவைச் சேர்ந்த ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட பனிப்பாறை மற்றும் பாறை சரிவைத் தொடர்ந்து ஏற்பட்ட பேரழிவில், நேபாளத்தில் இதுவரை 1,344 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், சுமார் 5,000 பேர் காணாமல் போயுள்ளனர்.

Related News