Sep 6, 2026
Thisaigal NewsYouTube
சகிப்புத்தன்மைக்கான சவாலில் பங்கேற்ற யுஐடிஎம் (UiTM) மாணவர் உயிரிழப்பு - 8 பேர் மருத்துவமனையில் அனுமதி
தற்போதைய செய்திகள்

சகிப்புத்தன்மைக்கான சவாலில் பங்கேற்ற யுஐடிஎம் (UiTM) மாணவர் உயிரிழப்பு - 8 பேர் மருத்துவமனையில் அனுமதி

Share:

பகாங் மாநிலம், Maran-ல் உள்ள யுஐடிஎம் ஜெங்கா (UiTM Jengka) வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற சகிப்புத்தன்மைக்கான சவாலில் பங்கேற்ற யுஐடிஎம் மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும், வெப்பம் தொடர்பான உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளான 8 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிரம்பான் யுஐடிஎம் வளாகத்தில் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு மேலாண்மை துறையில் டிம்ப்ளோமா படித்து வந்த ஃபட்லான் ஃபக்ரி, இதற்கு முன் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் பங்கேற்றிருந்தார்.

போட்டியின் இறுதிக் கட்டத்தை நெருங்கிய போது அவர் பலவீனமாகக் காணப்பட்டு மயங்கி விழுந்ததாக அவரது தந்தை முஹமட் ஃபெல்லிமால் முஹமட் சுலானா தெரிவித்துள்ளார்.

முதலில் ஜெங்கா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், பின்னர் தெமர்லோ சுல்தான் ஹாஜி அஹ்மாட் ஷா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். வெப்பத் தாக்கத்தால் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று பிற்பகல் 2 மணியளவில் உயிரிழந்தார்.

மேலும், இதே போட்டியில் வெப்பம் தொடர்பான உடல்நலப் பாதிப்புக்கு உள்ளான மேலும் 8 மாணவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related News