இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள Soekarno-Hatta அனைத்துலக விமான நிலையத்தில் எரிமலைச் சாம்பல் காரணமாக, அந்நாட்டு நேரப்படி, இன்று காலை 9.30 மணி வரை விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இதனால் ஜகார்த்தாவுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் ஏர் ஏசியாவின் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், சில விமானங்களின் நேரங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
மவுண்ட் அனாக் கிராகாதாவ் என்ற எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து விமானப் பாதைகளில் எரிமலைச் சாம்பல் பரவியதால், விமானப் பாதுகாப்புக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஏர் ஏசியா தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, பாதிக்கப்படக்கூடிய விமானச் சேவைகளில் தேவையான செயல்பாட்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு அவர்களின் விமானங்களின் நிலை மற்றும் அடுத்தகட்ட பயணத்திற்கான மாற்று வாய்ப்புகள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதாக ஏர் ஏசியா அறிவித்துள்ளது.








