May 4, 2026
Thisaigal NewsYouTube
தித்திவங்சா எம்ஆர்டி மேம்பாலத்திலிருந்து விழுந்து 47 வயது நபர் பலி
தற்போதைய செய்திகள்

தித்திவங்சா எம்ஆர்டி மேம்பாலத்திலிருந்து விழுந்து 47 வயது நபர் பலி

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.26-

கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக்கில் உள்ள தித்திவங்சா எம்ஆர்டி நிலையத்தின் பாதசாரிகள் மேம்பாலத்திலிருந்து விழுந்து 47 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இன்று காலை உயிரிழந்தார்.

இது குறித்து இன்று காலை 8 மணியளவில் போலீசாருக்குத் தகவல் கிடைத்ததாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சஸாலி அடாம் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த நபர் தரையில் விழுந்து கிடந்ததைக் கண்டறிந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் இந்தச் சம்பவத்தில் எந்தவிதமான குற்றவியல் கூறுகளும் கண்டறியப்படவில்லை. அவர் தித்திவங்சா எம்ஆர்டி நிலைய மேம்பாலத்திலிருந்து விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்று சஸாலி அடாம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related News