Jul 6, 2026
Thisaigal NewsYouTube
துன் மகாதீரின் பயணச் செலவை அரசாங்கம் ஏற்றது
தற்போதைய செய்திகள்

துன் மகாதீரின் பயணச் செலவை அரசாங்கம் ஏற்றது

Share:

மலாக்கா, ஜூன்.12-

கடந்த மாதம் ஜப்பான், தோக்யோ நகரில் நடைபெற்ற 30 ஆவது நிக்கேய் அனைத்துலக மாநாட்டில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது மற்றும் அவர் தலைமையிலான பேராளர்கள் குழுவினர் பங்கேற்பதற்கு முழுச் செலவையும் அரசாங்கம் ஏற்றுக் கொண்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இதற்கான மொத்த செலவினம் 4 லட்சத்து 86 ஆயிரம் ரிங்கிட்டாகும். அதற்கான ஒதுக்கீட்டை அரசாங்கம் அங்கீரித்ததாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

ஜப்பான், தோக்கியோவில் நடைபெற்ற இந்த அனைத்துலக மாநாட்டில் கலந்து கொள்வதற்கு நாட்டின் நான்காவது மற்றும் ஏழாவது பிரதமரான துன் மகாதீர், அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்து இருந்தார். அந்த விண்ணப்பத்தை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.

ஒரு முன்னாள் பிரதமர் என்ற முறையில் துன் மகாதீர், இத்தகைய விண்ணப்பத்தை செய்வதற்கு உரிமைப் பெற்றுள்ளார். ஆனால், அதனை நடப்பு பிரதமர் மட்டுமே அங்கீகரிக்க முடியும் என்பது நிபந்தனையாகும் என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

Related News

உலு கிந்தா ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்: சட்டச் சிக்கலைத் தவிர்க்க ஆலயங்களைப் பதிவு செய்ய டத்தோ சிவநேசன் வலியுறுத்தல்

உலு கிந்தா ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்: சட்டச் சிக்கலைத் தவிர்க்க ஆலயங்களைப் பதிவு செய்ய டத்தோ சிவநேசன் வலியுறுத்தல்

இந்தியச் சமூகத்தின் கல்வி மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்குத் தோள் கொடுக்கும் வோங் போர் யாங்

இந்தியச் சமூகத்தின் கல்வி மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்குத் தோள் கொடுக்கும் வோங் போர் யாங்

வெளிநாட்டுத் தொழிலாளர் கோட்டா நிர்வாகம் இனி டிஜிட்டல் மயம்: அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் அதிரடி

வெளிநாட்டுத் தொழிலாளர் கோட்டா நிர்வாகம் இனி டிஜிட்டல் மயம்: அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் அதிரடி

மலேசியாவின் எதிர்கால வெற்றிக்கு மனிதவளத் தரமே முக்கியம் – துணைப் பிரதமர் வலியுறுத்து

மலேசியாவின் எதிர்கால வெற்றிக்கு மனிதவளத் தரமே முக்கியம் – துணைப் பிரதமர் வலியுறுத்து

54 நிறுவனங்களிடமிருந்து எந்த நிதி பலனும் பெறவில்லை – ஜனா விபாவா வழக்கில் தெங்கு ஸஃப்ருல் சாட்சி

54 நிறுவனங்களிடமிருந்து எந்த நிதி பலனும் பெறவில்லை – ஜனா விபாவா வழக்கில் தெங்கு ஸஃப்ருல் சாட்சி

வழிப்பாட்டுத்தலம் அருகே பயங்கர தாக்குதல் – ஒருவர் கவலைக்கிடம்; 5 பேர் கைது

வழிப்பாட்டுத்தலம் அருகே பயங்கர தாக்குதல் – ஒருவர் கவலைக்கிடம்; 5 பேர் கைது