கோலாலம்பூர் ஜாலான் சான் சாவ் லின் பகுதியில் உள்ள கார் உதிரிபாகக் கிடங்கு ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், கட்டிடத்தின் சுமார் 90 விழுக்காடு பகுதி தீக்கிரையானது.
இது குறித்து அதிகாலை 5.53 மணியளவில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, புடு தீயணைப்பு நிலையத்திலிருந்து வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மேலும், ஆறு தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த குழுக்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இந்நிலையில், சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு காலை 7.03 மணியளவில் தீயானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
சுமார் 70 அடி நீளமும் 150 அடி அகலமும் கொண்ட பகுதியில் தீ பரவியதாகவும், இந்தச் சம்பவத்தில் உயிரிழப்போ காயமோ ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








